Thursday, November 5, 2009

அமைதியற்ற மனதிற்கு, அமைதி வேண்டும்,

தூக்கமிழந்த கண்களுக்கு , தூக்கம் வேண்டும்,

இதயமிழந்த எனக்கு, இதயம் வேண்டும்.

இனி, நம்பிக்கை மீது நம்பிக்கையில்லை,

அமைதியான இதயத்திற்குத் தேவையான,

தூக்கத்தை நானே தேடிக் கொண்டேன்.

கடவுளே, உன்னிடம் ஒரு வரம்

"உண்மைக் காதலை மட்டும்

உலகில் இருந்து எடுத்துவிடு ".

உண்மையானவர்களும் சாதிக்கப் பிறந்தவர்கள்.

அவர்களும், உலகில் வாழட்டும்.

No comments:

Post a Comment