Thursday, November 5, 2009

வாழும் வரையில் நான் கேட்டும்,
ஒற்றை ரோஜா தராத நீ,
இன்று ஏன் பூமாலையோடு ?
உனக்குத் தெரியாதா?
நீ கொடுக்கும் பூவைத் தான்,
சூடுவது என்ற முடிவில்
இத்தனை ஆண்டுகளாய்
வாழ்ந்தேன் என்று ?
சரி, நம் இருவரின் ஆசையும்
நிறைவேறட்டும்.
அந்த மாலையில் இருந்து,
ஒற்றை ரோஜாவை தந்துவிட்டு போ !

No comments:

Post a Comment