Tuesday, November 10, 2009

எத்தனை உன்னதமான உயிரை, தகுதியற்ற
ஒருத்தனுக்காக இழக்க இருந்தேன் ,
நெற்றியில் இடும் திருநீற்றில்,
கத்தி வைத்திருக்கிறாய்,
மந்திரம் சொல்லும் வாயாலே,
பொய் உரைக்கிறாய்,
கழகு கூட இறந்த பிணத்தை தான் தின்னும்,
நீயோ கசாப்புக் காரனை போல்,
உயிருடான் அறுக்கிறாய்.
ஒன்று போனால் தான் ஒன்று வாழும்.
மனைவியடனான் அந்தரங்கத்தைப் பதிவு செய்து,
விற்கும் மனிதர்கள் இருக்கும் போது,
என் உணர்வுகளை பதிவு செய்து அரங்கேற்றிய,
உனது செயல் அந்த அளவிற்கு பாவமில்லை.
நல்லகாலம் விழித்துக் கொண்டேன்,
உணர்வை பதிவு செய்த உனக்கு,
அந்தரங்கத்தைப் பதிவு செய்வது பாவச் செயலில்லை.
வாழ்க்கை வெறும் வெங்காயம் தான்,
அதனால் தான் எல்லா அத்தியாயங்களும்,
கண்ணிரால் எழுதப் பட்டுள்ளன்.
வெங்காயத்தை தண்ணீரில் போட்டால்
கண் ஏறியதாம், அதனால்தான்,
அத்தனைக் கூட்டமோ அந்த கடைகளில் ?
ரோஜாவில் முள் இருக்காது,
ரோஜா செடியில் தான் முள் இருக்கும்,
என் வீட்டு ரோஜா செடியில்,
இலைகளுமில்லை,பூக்களுமில்லை,
வெறும் முட்கள் மட்டும் தான்.
பசுந் தோல் போர்த்திய புலிகள்,
புலித் தோல் போர்த்திய பசுக்கள்,
பட்டைப் போட்ட நரிகள்,
நாமம் போட்ட கரடிகள்,
மிருக நாற்றமடிக்கும் வீடுகள்,
சம்சாரியாக வாழும் சந்நியாசி ,
சந்யாசியாக வாழும் சம்சாரி,
திரும்பிய பக்கமெல்லாம்,
சிங்கங்கச்ளும், சிறுத்தைகளும்,
சர்வ சுதந்திரமாய் உலவ,
மான்களும்,மயில்களும்,

Monday, November 9, 2009

உன் நினைவுகளை வெட்டி வீசி எறிந்தாலும்
பாசம் வேருன்றி விட்டதால், என் இதயம்
உன்னை மறக்க மறுக்கின்றது.
ஏனோ,எனக்கு நினைவு குறைகிறது,
நீ என் ரத்தத்தை குடித்து அல்லவா ,
என்னுள் அரசு, ஆல், போல் வேருன்றி விட்டாய்.

Friday, November 6, 2009

நீ நிலவில் இருந்து வரும்போது,
பஞ்சுப் பொதி மேகங்கள் நெய்த,
மாலைசூரியன் நிறத்தினைக் கொண்ட,
புடவை ஒன்றை பாசத்துடன் பரித்துவா!
காலையில் பள்ளி மைதானத்தில் ,
குதித்து விளையாடும் குருவிகள்,
முதல்நாள் மழை நீரில்,
குளித்து சிலிர்க்கும் காக்கைகள்,
வகுபிற்கிடை, தட்டியில் ஓட்டையிட்டு ,
மாற்றிக்கொள்ளும் பேனா, பென்சில்கள்,
கலர்கலராய் குச்சி ஐஸ் ,
பள்ளித் தோட்டத்து பச்சைமாங்காய்,
மழைகாலத்தில் சாலைக்கு இணையாக,
வகுப்பறையில் கணுக்கால் மழைநீர்,
கால்கள் மழைநீரை அளைய,
கண்கள் பேய் மழையை வேடிக்கைபார்க்க,
காதுகள் எதோகொஞ்சம் ப்பாடம்கேட்கும்,
மாலையில் மழைநீரில், பல்லவன் பேருந்து
உண்டாக்கும் அலைக்கு ஒதுங்கி,
மழைநீரில் கப்பல் விட்டபடி
வீட்டுக்கு பயணம்.

Thursday, November 5, 2009

காதல் இதயம் , என்றென்னி சாத்தானிடம்

மாட்டிக்கொண்டேன். என்னை விடுவிக்க நான்

முயன்றும்,அது என்னை விடுவதாய் இல்லை.

இன்று, சாத்தானை உணர்ந்த நான், என்னை,

உணரமுடியாத அதனுடன் .

என் கனவு எனக்குப் பிடிக்கும்,

கனவில் வரும் உன்னைப் பிடிக்கும்,

கனவில் நம் இல்லறம் பிடிக்கும்,

உன்னைத் துயில் எழுப்பித் தூங்கச் செய்யும், என்

என் கடமைகளும், உன் "கடமைகளும் ",

அங்குதான் முழுமை அடைகின்றன,

மாலையில் நீ கொண்டுவரும் பத்துமுழ

மல்லிகையும், காலைக்குள் பந்தாடப் பட்டுவிடும்.

கண்கள் நிறைய கனவுகள், கைகள் நிறைய

வளையல்கள், இதயத்தில் "ஒருவனாய்" சுமந்த உன்னை,

சிறிது இடம் மாற்றி, " இருவராய்" சுமக்க ஆசை.

நம் மகளுடன் சேர்த்து உனக்கும் " பசிஆற்றிட" வேண்டும்.

என் கனவு எனக்குப் பிடிக்கும்.

அழகிய பௌர்ணமி நாளன்று,

மாலையும், இரவும், சந்திக்கும் வேளையில்,

உன்னுடன் தோள் சேர்ந்து, நிலவை ரசிக்க ஆசை,

ஆழ்நீலக் கடலின் கரையில் நின்று,

நம் காதலின் ஆழத்தை அளந்துவிட ஆசை.

வாழும் வரையில் நான் கேட்டும்,
ஒற்றை ரோஜா தராத நீ,
இன்று ஏன் பூமாலையோடு ?
உனக்குத் தெரியாதா?
நீ கொடுக்கும் பூவைத் தான்,
சூடுவது என்ற முடிவில்
இத்தனை ஆண்டுகளாய்
வாழ்ந்தேன் என்று ?
சரி, நம் இருவரின் ஆசையும்
நிறைவேறட்டும்.
அந்த மாலையில் இருந்து,
ஒற்றை ரோஜாவை தந்துவிட்டு போ !
கடவுளே, உன்னிடம் ஒரு வரம்
"உண்மைக் காதலை மட்டும்
உலகில் இருந்து எடுத்துவிடு ".
உண்மையானவர்களும்
சாதிக்கப் பிறந்தவர்கள்.
அவர்களும், உலகில் வாழட்டும்.

அமைதியற்ற மனதிற்கு, அமைதி வேண்டும்,

தூக்கமிழந்த கண்களுக்கு , தூக்கம் வேண்டும்,

இதயமிழந்த எனக்கு, இதயம் வேண்டும்.

இனி, நம்பிக்கை மீது நம்பிக்கையில்லை,

அமைதியான இதயத்திற்குத் தேவையான,

தூக்கத்தை நானே தேடிக் கொண்டேன்.

கடவுளே, உன்னிடம் ஒரு வரம்

"உண்மைக் காதலை மட்டும்

உலகில் இருந்து எடுத்துவிடு ".

உண்மையானவர்களும் சாதிக்கப் பிறந்தவர்கள்.

அவர்களும், உலகில் வாழட்டும்.

என்னுடைய நோய்க்கு உன்னிடம் ,
மருந்திருந்தும், தர மறுக்கிறாய் ,
நோய்க்கு " உணவிடாமல் " அதையே
மருந்தக்கினால், நோயும் மரித்துவிடும் .
என்னுடைய நோய்க்கு உன்னிடம் ,
மருந்திருந்தும் தர மறுக்கிறாய் ,
நோய்க்கு உணவிடமல், அதையே
மருந்தக்கினால் , நோயும் மரித்துவிடும் .
இமை மூடும் மெல்லிசையில், உதட்டோரப் புன்னகையில்,
மென்மையாய் வருடிச் செல்லும் உன் நினைவுகள்,
" என் நிழலையே காணாத நிஜமாய் நான் ",
உன் நினைவுகளின் உயிர் குடித்தபடி வாழ்கிறேன் .

Tuesday, November 3, 2009

மரணத்திற்கு பின்னாலும் , மனிதனால்
உயிர் வாழ முடியுமா ? முடியும் ,
உன்னை பிரிந்து இன்னும்
"நான் வாழ்கிறேன் ".
உடல் பிரிந்த சிறகாய், என் நினைவுகள் ,
உன்னை தேடி அலைகிறது வானில் ,
உன் முகவரி தெரிந்தும் முகம்
பார்க்க முடியாமல் நான் .
"குற்றமே " செய்யாத ஒருத்தனை ,
" குற்றவாளி " ஆக்கிய எனக்கு ,
என்ன தண்டனை ?
அந்த "நல்லவன் "
என்னை "மன்னிப்பது "
மட்டும் தான் .
என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு பார்த்த ,
நீ பேசுகிறாய் , 'பார்க்க என்ன இருக்கிறது ,
பேச என்ன இருக்கிறது ".

என் இதயம் உன்னை தேடிய போது ,
உன் இதயம் தாளிடப்பட்டு விட்டது ,
காற்றாய் நான் வந்த போது ,
உன் வீட்டு கதவு சாத்தப்பட்டு இருந்தது ,
சாரலாய் நான் தெறித்த போது ,
உன் ஜன்னல் மூடிக் கொண்டது ,
தற்சமயம் உன் வீட்டு கிணற்றில்
"நிலவாய்" நான் .
"பால பாடத்தில் " இருந்து "பள்ளி பாடத்திற்கு "
இப்போது என்றால் "பால பாடம் " எப்போது + .....
தார் சாலைக்கு எடுத்த தாகத்தை போல்
என் கண்ணீரை ரசித்தாய் , ஆனால்.
நீ உன் புன்னகையால் மறைத்த,
கண்ணீர் துளியில் உன்
"ஈர இதயத்தை " கண்டேன் .
நேற்று என்னுடன் மெரினாவில் உலா வந்த நிலா
இன்று மயாமியில், என் உலகின் சந்திர கிரகணத்தை
மட்டும் நீயே நிச்சயிகிறாய்;
உன் படைப்பிற்கு பூங்கொத்து அளிக்க வந்த நான் ,
அளவான படைப்பிற்கு அளவில்லாத , உன் குருதி
உறைந்த போது, உன் சுற்றமான நல்லிதியங்களில் ,
குருதி கொப்பளித்ததை உணர்ந்தேன் .

கவிதை

அஸ்தமனத்தை தேடி கிழக்கே சென்ற நான் ,
மேற்கில் விடியலின் வெளிச்சமாய் , என்
நண்பனை கண்டேன். அவன் கண்களின்
ஒளி வெள்ளத்தில் காணாமல் போனது
என் அஸ்தமனத்தின் வேட்கை.
சுப்ரமனியயும் , வீரப்பனையும் , சிலை செய்த
உன் கரங்களை கழுவ , உன் வாசல் வரை
வந்தவள் "சுனாமியல்ல ", "கங்கை ".
கவிதை
"முகவரிகளே" முதுமையின் "முகவரி"
காதல் என்பது "ரசாயன மாற்றமல்ல " ரசனை மாற்றம் "
"கணக்கு " சரியில்லை "வழக்கு" தானே வரும்.